பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்கள் ஒரே தொடரில் தான் நடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கலாம். இதனால் சின்னத்திரை நடிகர்கள் பலர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் பாரதிக்கு தந்தையாக நடிப்பவர் ரிஷி கேசவ்.
இவர் தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து வெளியேறியுள்ளார். அவர் எதற்காக வெளியேறினார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. மேலும் அவரின் கதாபாத்திரத்தில் மற்றொருவர் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.