Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார வயர்… மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் கூரை மீது விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது.

அப்போது ஜானகி அந்த வயர் மீது தெரியாமல் கை வைத்ததால் மின்சாரம் மூதாட்டி மீது பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கேணிக்கரை காவல்துறையினர் ஜானகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |