Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்..? வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோஷ்டி மோதலில் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் காளிக்கவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பலும் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 15 பேர் கொண்ட கும்பலும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு 15 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகிய 4 பேருக்கும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த வினோத்குமார் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதன் காரணமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் நுழைவுவாயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Categories

Tech |