விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 தற்பொழுது ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோக்களும் வெளிவந்தன.
Here it is,
A Mostly confirmed contestant 👇🏻#biggbosstamil #biggbosstamil5 pic.twitter.com/Bsk0thhhCH
— Imadh (@MSimath) September 6, 2021
குறிப்பாக இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா அவர்கள் பங்கேற்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.