Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்மநபரின் கைவரிசை… ‘போலீசார் வலைவீச்சு’…

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது கழுத்தில் சங்கிலி இல்லாததை கவனித்த நாகவள்ளி அதிர்ச்சியடைந்து இதுகுறித்து உடனடியாக ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |