சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 340 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தியாகராஜர் நகரில் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை இரண்டு வழி மேம்பாலம் கட்டுவதற்கும், ஓட்டேரியில் எழுபத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு வழி மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சிங்காரச் சென்னை 2.0 இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் சேர்த்து 340 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.