மலைப் பாதையில் நடைபெறும் மண்சரிவு சீரமைப்பு பணியினை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுமார் 3 மணி நேரம் நீடித்த மழையினால் குப்பனூர் செல்லும் சாலையில் காக்கம்பட்டி கிராமம் அருகில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலைதுறை உதவி இயக்குனர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில்தீவிரமாக நடைபெறும் தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு தடுப்பு மற்றும் சாலை பலப்படுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊராட்சி தலைவர் செந்தில் மற்றும் சாலை ஆய்வாளர்கள் அவருடன் இருந்தனர்.