சிறுவர்களின் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சிலும் இது விரைவில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் பிரான்சில் மிகவும் குறைந்து வயது கொண்ட சிறுவர்களை இது போன்ற இணையதளங்கள் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக e-Enfance மற்றும் Voix de l’Enfant போன்ற குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி Orange, SFR, Bouygues Télécom, Free, Colt Technologies Services மற்றும் Outre mer Télécom போன்ற இணையதள உரிமையாளர்களிடம் இதனை முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இதனை மேற்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி முதல் ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று Tribunal judiciaire de Paris தெரிவித்துள்ளது. அதில் Pornhub, Youporn, Xvideos, RedTube போன்ற இணையதளங்களும் முடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.