கோடநாடு வழக்கில் காவலாளி கிருஷ்ணா தாபாவை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோடநாடு வழக்கு நாளுக்குநாள் சூடுபிடித்து கொண்டே வருகின்றது.. இதற்கென 5 தனிப்படைகள் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.. நேற்று கூட ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி அனிஷிடம் சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.. இந்நிலையில் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனி படையில் உள்ள டிஎஸ்பி சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட தனிப்படை காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் இவ்வழக்கில் புகார்தாரரான காவலாளி கிருஷ்ண தாபாவை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேபாளத்தில் இருந்து கிருஷ்ண தாபாவை அழைத்து வந்த காவல் அதிகாரிகளை மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த முறை நேபாளத்திலிருந்து கிருஷ்ண தாபாவை அழைத்து வந்து விசாரித்த நிலையில் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..