Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல குளறுபடி இருக்கு…. எவிடன்ஸாக மாட்டிய ஆடியோ…. பொதுமக்கள் புகார்….!!

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு ஊராட்சியில் மொத்தமாக ஒன்பது வார்டுகள் இருக்கிறது. அதில் 5, 101 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் ஊராட்சியில் இருக்கும் 3 மற்றும் 7-வது வார்டுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலர் முருகேசனிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனால் அந்த வார்டில் வசிக்கும் 190 நபர்கள் தாங்கள் வாக்கு அளிப்பதற்கான அடையாள அட்டையை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் தேர்தலை புறக்கணிக்க செய்வோம் எனவும், சுயநலத்திற்காக இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வார்டுகள் பிரிக்கப்படும் போது நியமிக்கப்படுகின்ற ஊராட்சி செயலாளரும், சுபாஷ் என்பவரும் பேசிய ஆடியோவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Categories

Tech |