ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித்துணிக படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் தற்போது எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ், சிவசிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் எண்ணித்துணிக படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
Get ready for a musical treat! ✨
We are elated to announce that we have acquired the audio rights of @Actor_Jai’s #YenniThuniga!A @SamCSmusic Musical @AthulyaOfficial @sureshs1202 @rainofarrowsENT @vetriselvansk2 @ianjalinair @editorsabu @NjSatz @DoneChannel1 @DesignPoint pic.twitter.com/LlkkiLB1kJ
— Think Music (@thinkmusicindia) September 7, 2021
ரெய்ன் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் எண்ணித்துணிக படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.