நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
அன்பால் அனைவரையும் கவரக்கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செயல்களில் நேர்த்தி உருவாகும். உங்களுடைய உழைப்பிற்கான பலன் இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் விலகிச்செல்லும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவர்களை முன்னிறுத்தி தான் தப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். உங்களுடைய சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப்பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்வதாக இருந்தால் இன்று பச்சை நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகளும் வந்து சேரும். அதே போல காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
ரிஷபம் :
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
எந்த வேலையும் திறமையாக செய்து முடித்து பாராட்டுகளை பெறக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சந்தோஷமும் பெறுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் அபரிதமான முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று பணவரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் விலகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த ஒரு காரியமும் சாதகமாக இன்று முடியும். சிறுதொழில் செய்யக்கூடியவர்கள் இன்று அதிக லாபத்தை பெற முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். உங்களுடைய வாக்கு வன்மையால் அனைத்துமே சிறப்பாக செய்வீர்கள்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான வேலையை செய்யும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டை அல்லது ஆடை அணிந்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புக்களும் கிடைக்கும். முடிந்தால் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்குவது சிறப்பு. அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் :
எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று சிறு செயல்கள் கூட உங்களுக்கு கடினமாக தோன்றும். உறவினரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாகவே உழைக்க வேண்டி இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும்.
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்து செல்லும் பொழுது காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். உங்களுக்கு ஆதரவாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
கடகம் :
மன தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு குறைசொல்ல சிலர் காத்திருக்கக் கூடும். அளவுடன் பேசுவதால் நன்மையை நீங்கள் பெறலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தவும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தகுந்த ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது மட்டும் கவனமாக இருங்கள். வீண் பகை கொஞ்சம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்க்காமல் இருப்பது நல்லது.
வீண் அலைச்சல் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். அதே போல உங்களை கண்டு பொறாமை பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு செல்லுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
சிம்மம் :
எப்பொழுதுமே தலைமை பண்பு வகிக்கக்கூடிய சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் கருணை மனதுடன் பழகுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஈடுபடக்கூடும் பார்த்துகொள்ளுங்கள். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சாதகமான பேச்சு மூலம் காரிய வெற்றி இன்று இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரக்கூடும். மற்றவர்களை திருப்தி அடைய செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும்.
டெக்னிக்கல் சார்ந்த துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இன்று இருக்கும். நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். வாக்குறுதியை மட்டும் யாருக்கும் இன்று கொடுக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் பாடங்களை கொஞ்சம் கவனமாக படிப்பது நல்லது. இன்று வெளியிடங்களுக்கு செல்லும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
கன்னி :
கலை மீது ஆர்வம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அளவான வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சந்தோச நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு நீங்கி அலைச்சல் குறையும்.
எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வார்கள். சக மாணவர்களிடமும் அன்பாகவே நடந்து கொள்வார்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியம் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். முடிந்தால் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
துலாம் :
அழகான வசிக தோற்றம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்மறையாக தெரிந்த செயல் நன்மையை கொடுக்கும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் உண்டாகும். இன்று உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எது செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்து செய்வது மிகவும் சிறப்பு. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் உங்களுக்கு நல்ல பலன்களும் கிடைக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.
டென்சனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. கூடுமானவரை கோபப்படாமல் இருங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது மிக மான காரியத்தை செய்யும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மனமகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
விருச்சிகம் :
மற்றவர்களை எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை பொது இடத்தில் சந்திக்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய நினைவுகள் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். இன்று பணவரவு அளவாகவே இருக்கும். சத்து நிறைந்த உணவுகள் உண்டு மகிழ்வீர்கள். தேவையில்லாத உணவுகளை உண்டு தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். உடல் நலனை பாதுகாப்பது ஒரு மனிதனின் தலையாய கடமை. அதை நீங்கள் சரியாக செய்யுங்கள். இன்று மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் பொழுது வெளியூர்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு கொஞ்சம் ஏற்படக்கூடும். நிதானமாக செயல்படுவது நல்லது. நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைப்பீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு நன்மையை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். நீங்களும் ஆனந்தம் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவியிடம் பழகும்போது பார்த்து பழகுங்கள். அது போலவே விளையாடும் பொழுது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கையில் அடிபடக் கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முடிந்தால் காலையில் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி பெரும் காரியமாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
தனுசு :
எப்பொழுதுமே மற்றவர்களுக்காக கடுமையாக உழைக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே.!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறு விலகி செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று செலவைக் குறைப்பதன் மூலம் பணம் தட்டுப்பாடு குறையும். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். இரகசியம் காப்பது மிகவும் நல்லது. குடும்பத்தை பற்றி பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே திட்டமிட்டு காரியங்களை எதிர்கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்தை செய்யும்போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மனமகிழ்ச்சி பெறுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
மகரம் :
பொறுமையாக இருந்து அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய மகரராசி அன்பர்களே..!! இன்று புதியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான காரணிகள் பலம்பெறும். இன்று பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதிக்கு வழிவகுக்கும். இன்று எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கூடுமானவரை தலையாட்டி கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் இருக்கும். பணவரவு திருப்தி தரக் கூடிய சூழல் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். விளையாடும் போது மட்டும் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அணைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் :
அடுத்தவருக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து போகும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்படலாம். முக்கியமான செயல் நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வது அவசியம். கொஞ்சம் பணம் கடன் வாங்க கூடிய சூழல் ஏற்படும். எதிரியிடம் விலகி இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் இருக்கும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்ற குழப்பம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்சனுடன் காணப்படுவார்கள். கோபம் கொஞ்சம் தலைதூக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனப் பிரச்சினைகள் நீங்கி தெளிவான நிலையை இன்று அடைய கூடும். இன்றைய ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். பொறுமையை கையாளுங்கள். பதட்டம் வேண்டாம். தயவு செய்து மீண்டும் ஒரு முறை பதட்டம் வேண்டாம்.
பதட்டப்படாமல் இருந்தாலே நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். உங்களுடைய மூச்சை நன்றாக இழுத்து விட்டு காரியங்களை செய்யுங்கள் மிகவும் முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை சந்திக்க நேரிடும். இருந்தாலும் பொறுமையை கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பை ஏற்படுத்தித் தர கூடியதாக இருக்கும். மனமும் உங்களுக்கு மகிழ்வாக காணப்படும். முடிந்தால் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்குவது சிறப்பு. அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீளம் மற்றும் மஞ்சள் நிறம்
மீனம் :
பொறுமையின் சிகரமாக திகழும் மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு முக்கியமான பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் உருவாகும். நல்லோரின் ஆலோசனை மாற்று வழியை கொடுக்கும். தொழில் வியாபாரம் சீராக தகுந்த அளவில் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். தேவையில்லாமல் செலவு வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பொறுமையாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லுங்கள். வாகனத்தில் செல்லும்போது பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனஸ்தாபம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சின்ன சின்ன பிரச்சனைகள் இல்லத்தில் வரக்கூடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்று எல்லா விஷயத்தையும் சரிசெய்துவிடலாம். தயவுசெய்து இன்று நீங்கள் வீன் வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். என்னால் முடியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என எதையும் செல்ல வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் தான் முன்னேற முடியும். கவனமாக இருப்பது மிகவும் நல்லது. இன்று மிகவும் முக்கியமான காரங்களுக்கு செல்லும் பொழுது மிகவும் பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையில் சென்றால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்