ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி உருவாக்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சிக்கலில் முடிந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்துள்ளனர் .
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு படைகளும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்டு விமானங்கள் மூலம் வெளியேற்றியும் வந்துள்ளனர். மேலும் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியும் சென்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பதில் தலீபான்கள் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அதாவது தலீபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆவார். இவர்தான் இந்த தீவிரவாத அமைப்பை நிறுவியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் அமைக்க இருக்கும் புதிய ஆட்சிக்கு இவர்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆட்சியை உருவாக்குவது குறித்து தலீபான்களுக்கும் ஹக்கானிகளுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்ததுள்ளது.
அப்போது தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதனுக்கும் ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ்க்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை அதிகமாகி தள்ளு முள்ளில் முடிந்துள்ளது. இந்த தள்ளு முள்ளில் தலீபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி தெரிவிக்கின்றது. இதனையடுத்து இந்த இருதரப்புக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரான பைஸ் ஹமீது காபூலுக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் இந்த இருதரப்புக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தலீபான் அமைப்பின் தலைவரான ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய ஆட்சி மிக விரைவில் அமைக்கப்படும்” என கூறியுள்ளார்.