ஆக்லாந்தில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் கவுண்டவுன் லின்மா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதிக்குள் அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற 32 வயது உடைய இலங்கைத்தமிழர் புகுந்து 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் போலீசார் அந்த இலங்கை தமிழரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதாவது இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்துள்ளார். மேலும் அந்த நபர் கவுண்டவுன் லின்மாக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏழு வாரங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறையில் அஹமது ஆதில் முகமது சம்சுதீன் சிறையில் இருந்தபோது அவரது நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து புதிய தகவல்கள் எழுந்துள்ளது.
இதுக்குறித்து அவர்கள் கூறியதாவது ” அஹமது ஆதில் முகமது சம்சுதீன் Mt Eden சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சிறை அதிகாரிகள் இருவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து ஒரு கட்டத்திற்குப் பின்னர் அதிகாரிகளை தாக்கவும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில சமயங்களில் அவர் சிறுநீர் மற்றும் மலத்தை சிறைப் பணியாளர்கள் மீது வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை பயமுறுத்தி தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். அதன்பின் மூன்றாம் ஆண்டு இறுதிகட்டத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஆக்லாந்து சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அப்போது அவருக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்க முன்வந்த போது அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அவர் உளவியலாளர்கள் நெருங்கவும் விடவில்லை. இதற்கிடையில் அவர் தனக்கு உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரும் கிடையாது. நான் மசூதி ஒன்றியில் தங்கி வந்ததாகவும் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதும் மீண்டும் மசூதிக்கு செல்ல விரும்பவில்லை என்றும் சிறை அதிகாரியிடம் கூறியுள்ளார்.மேலும் அந்த சிறை அதிகாரியிடம் தனக்கு உதவுமாறும் கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் ஒருவழியாக கடைசியில் அவர் மசூதிக்கு செல்ல ஒத்து கொண்டுள்ளார். ஆனால் சிறையில் அவர் மிகவும் மோசமான நபராக இருந்துள்ளார். மேலும் நன்னடத்தை பணியாளர்களிடம் பயங்கரமான பகையுடன் சிறையில் அவர் நடந்து கொண்டுள்ளார்” என சுட்டிக்காட்டியுள்ளனர்.