நடிகர் விஜய் சேதுபதி தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் உப்பென்னா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூரமான வில்லனாகவும் நடித்து அசத்தி இருந்தார். தற்போது விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் ஒரு தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது.
இந்நிலையில் இதை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளாராம். அதாவது அவர் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க விரும்பவில்லையாம். இதனால் தற்போது அந்த படத்தில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.