ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
Here it is !
The Next single from youth sensation @hiphoptamizha 's #SivakumarinSabadham – #MiddleClassDa drops on 8th September coming Wednesday !@TGThyagarajan presents, a @SathyaJyothi_ and #IndieRebels production @it_is_madhuri pic.twitter.com/ewRHY4ZICM— Think Music (@thinkmusicindia) September 6, 2021
இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற ‘மிடில் கிளாஸ்’ என்ற பாடல் நாளை (செப்டம்பர் 8) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.