விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் மௌனராகம் 2 வில் முக்கியமான கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகங்களில் ஒன்றாக மௌனராகம் 2 வும் உள்ளது. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக கேரளாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலிலுள்ள முக்கிய கதாபாத்திரம் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. அதாவது மௌனராகம் 2 ல் உள்ள கதாபாத்திரங்களான வருண் மற்றும் தருணின் தந்தையே தற்போது மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக கே.கே மேனன் என்பவர் அதிரடியாக மௌனராகம் 2 சீரியலில் களமிறங்கவுள்ளார்.