தலைவி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் பேச பேச என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தலைவி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் பேச பேச என்ற அழகிய பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கண்ணும் கண்ணும் பேச பேச பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த அசத்தலான மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.