அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக செய்யப்படும் மதிப்பீட்டில் உலகளவிலுள்ள தலைவர்களில் இந்திய நாட்டின் பிரதமர் 70% ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவிலுள்ள தலைவர்களின் அங்கீகாரத்தை மதிப்பிடும் நிறுவனமான மார்னிங் கால்சல்ட் அமெரிக்க நாட்டை தலைமையகமாக கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வாரந்தோறும் உலகளாவிய தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தற்போது இந்தியா உட்பட 13 நாடுகளை சார்ந்த தலைவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மதிப்பிட்டு அவர்களது அங்கீகார முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வெளியிடப்பட்ட முடிவுகளில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி 70 சதவீத ஆதரவைப் பெற்று உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.