Categories
உலக செய்திகள்

2 நாடுகளும் ராணுவ கூட்டாளிகள்…. கடலில் நடைபெறும் பயிற்சி…. அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலியா….!!

AUSINDEX என்னும் இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு போர் புரியும் விதங்களை ஒத்திகை பார்ப்பதாக ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலுள்ள கப்பல் படைகள் ஒன்றாக சேர்ந்து AUSINDEX என்னும் ராணுவ பயிற்சியினை ஆஸ்திரேலிய நாட்டின் வடக்கு கடல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் இந்த இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு கடல் படையில் எவ்வாறு போர் புரிய வேண்டும் என்பது தொடர்பாக ஒத்திகை பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத் துறை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி இந்திய அரசாங்கமும் AUSINDEX பயிற்சி நடைபெறும் ஆஸ்திரேலிய நாடும் மிகச் சிறந்த இராணுவ கூட்டாளிகள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இருநாடுகளும் தங்கள் கடல் சார்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ராணுவம் தொடர்பான பயிற்சியை பரிமாறிக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |