அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தியும் கூட உலகளவில் சுமார் 22.19 கோடிக்கும் மேலான மக்களை கொரோனா பாதித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து மிகவும் தீவிரமான தாக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஒட்டுமொத்தமாக உலகளவில் 22.19 கோடிக்கும் அதிகமான பொதுமக்களை தாக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி 19. 85 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்கள்