Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாய்ப்பை இழந்தேன்’…. ராஜா ராணி சீரியல்…. வருத்தம் தெரிவித்த வேலைக்காரன் நடிகர்….!!

வேலைக்காரன் சீரியல் நடிகர் பல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும்  எடுக்கப்பட்டு தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா தான் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது என்று மக்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

 

மேலும் இந்த சீரியலில் முதல்முதலாக சித்து வேடத்தில் நடிக்க நடிகர் சபரி ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதனால் அந்த வேடத்திற்கு சித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் இது போன்று பல வாய்ப்புகளை இழந்துள்ளதாக வருத்தமுடன் கூறியுள்ளார். குறிப்பாக இவர் வேலைக்காரன் சீரியலில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |