Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுல திருத்தம் செஞ்சிருக்காங்க…. சோதனையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

போலி சான்றிதழ்களை தயாரித்து ஆசிரியர் பணியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கிரிசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய சான்றிதழில் உண்மையை கண்டறிய இயக்குனர் அலுவலகத்திற்கு சோதனை செய்ய அனுப்பி இருந்த நிலையில் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் வட்டார கல்வி அலுவலர் ஞானகிரிஜா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை போல் வெள்ளக்குட்டை ஊராட்சியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ஒளிவேந்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பிளஸ்-2 கல்வி சான்றிதழில் 3 பாடப்பிரிவுகளில் திருத்தம் செய்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை இயக்கனரகத்திலிருந்து வரப்பட்ட தகவலின்படி வட்டார கல்வி அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் ஒளிவேந்தன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தற்போது புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் 1 ஆசிரியர் மீதும் காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |