எப்பொழுதுமே தலைமை பண்பு வகிக்கக்கூடிய சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் கருணை மனதுடன் பழகுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஈடுபடக்கூடும் பார்த்துகொள்ளுங்கள். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சாதகமான பேச்சு மூலம் காரிய வெற்றி இன்று இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரக்கூடும். மற்றவர்களை திருப்தி அடைய செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும்.
டெக்னிக்கல் சார்ந்த துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இன்று இருக்கும். நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். வாக்குறுதியை மட்டும் யாருக்கும் இன்று கொடுக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் பாடங்களை கொஞ்சம் கவனமாக படிப்பது நல்லது. இன்று வெளியிடங்களுக்கு செல்லும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்