Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சைகொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இதில் கார்த்திக் காரிமங்கலம் அருகில் உள்ள தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது

இதனால் மனமுடைந்த கார்த்திக் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கார்த்திக்கை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |