கலை மீது ஆர்வம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அளவான வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சந்தோச நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு நீங்கி அலைச்சல் குறையும்.
எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வார்கள். சக மாணவர்களிடமும் அன்பாகவே நடந்து கொள்வார்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியம் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். முடிந்தால் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்