Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த நிறுவனங்களை கண்டித்து…. தொழிலாளர்களின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் மருத்துவர் சமூகம் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சலூன் கடையினை மூடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காளைமாட்டு சிலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியபோது பாரம்பரிய முடிதிருத்தும் தொழலில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த 30 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தொழிலை நம்பியே சங்க நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆனால் மாற்று சமூகத்தினர், பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தினர் இந்தத் தொழிலில் பல்வேறு சலுகைகளை அறிவித்து பாரம்பரிய முடிதிருத்தும் தொழிலை அழிக்க முயற்சி செய்கின்றனர். இதனிடையில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் வருமானம் இன்றி தவித்து வருவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே பெரும் சிரமத்தில் இருக்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் செயல்பாட்டால் தாங்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முடிதிருத்தும் தொழிலாளர்களின் பாதிப்பை கருத்தில்கொண்டு இந்த நிறுவனங்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |