சாமிக்கு முடியை காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் தேவையில்லை என அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு இருக்கின்ற பெரியமலையில் 1, 305 படிக்கட்டுகளும், சின்னமலையில் 406 படிக்கட்டுகளும் அமைந்திருக்கிறது. இதனையடுத்து தக்கான் குளக்கரையில் பக்தர்கள் அனைவரும் வேண்டுதலுக்காக தங்களின் முடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
அதன்பின் முடியை காணிக்கை செலுத்துவதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தமிழக சட்டமன்ற கூட்டு தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இனி வர இருக்கும் காலங்களில் கோவில்களில் கட்டணம் இல்லாமல் முடிகளை காணிக்கை செலுத்தலாம் என அறிவித்துள்ளனர். அதனால் இந்த திட்டமானது நரசிம்மர் கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்ற பக்தர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.