பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டெலிபோன் பவன் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பண பலன்களை உடனடியாக கொடுக்க வேண்டும். இதனையடுத்து 1-1-2017 முதல் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன்பின் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இதனைதொடர்ந்து கொரோனவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷங்களை எழுப்பினர். அந்தப் போராத்தில் மத்திய அரசு ஊழியர் இணைப்புகுழு செயலாளர் என்.ராமசாமி தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் சின்னசாமி, தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் போராட்டத்தில் நிர்வாகிகள் மாணிக்கம், சின்னையன், பரமேஸ்வரன், பரமசிவம் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.