சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தரணியை மதுவிலக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்துள்ளார்.
இதனை அடுத்து தரணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இம்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் படி தரணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.