Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

12 அம்ச கோரிக்கைகள்…. சாலை பணியாளர்களின் போராட்டம்…. கலெக்டரிடம் மனு….!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தலைவர் தர்மலிங்கம், செயலாளர் பாலமுருகன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சென்னியப்பன், மாவட்ட செயலாளர் சி.நல்லசாமி போன்றோர் கலந்து கொண்டு பேசினர். இதனையடுத்து போராட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்தல் மற்றும் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அதன்பின் சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் 1,900 ரூபாய் என மாற்றியமைத்து புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் சீருடை, சலவை படி, விபத்து படி, சைக்கிள் படி கொடுக்க வேண்டும். இதனைதொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதன்பின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் சங்க மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் உட்பட சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் இறுதியில் கோரிக்கை மனுவை சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |