இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பானூர் கிராமத்தில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் இதயக்கனி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரும் அதே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் இவர்கள் 2 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். பிறகு பெற்றோர்களின் சமதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து திடீரென இதயக்கனி தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் உறவினர்கள் இதயக்கனி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இதயக்கனி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக இதயக்கனியின் தாய் கஜலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.