Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “வேண்டாத நபரை சந்திக்க நேரிடும்”… நிதானமாக செயல்படுவது நல்லது..!!

மற்றவர்களை எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை பொது இடத்தில் சந்திக்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய நினைவுகள் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். இன்று பணவரவு அளவாகவே இருக்கும். சத்து நிறைந்த உணவுகள் உண்டு மகிழ்வீர்கள். தேவையில்லாத உணவுகளை உண்டு தேவையில்லாத பிரச்சனையில்  சிக்கிக்கொள்ள வேண்டாம். உடல் நலனை பாதுகாப்பது  ஒரு மனிதனின் தலையாய கடமை. அதை நீங்கள் சரியாக செய்யுங்கள். இன்று மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் பொழுது வெளியூர்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு கொஞ்சம் ஏற்படக்கூடும். நிதானமாக செயல்படுவது நல்லது. நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு நன்மையை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

நீங்களும் ஆனந்தம் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவியிடம் பழகும்போது பார்த்து பழகுங்கள். அது போலவே விளையாடும் பொழுது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கையில் அடிபடக் கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முடிந்தால் காலையில் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு  இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி பெரும் காரியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |