தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளடி.மானகசேரி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நதிக்குடி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று பாலையா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் சக தொழிலாளர்கள் பாலையாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பாலையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.