Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேனையாபுரம் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து காளிராஜிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகுராசாதிக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அழகுராசாதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்பிறகு அழகு ராசாத்தியின் தாயார் வீட்டில் கணவன் – மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று காளிராஜ் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சேனையாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று காளிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |