தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு வந்த 2,600 டன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி கொடுக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான ரேஷன் அரிசி பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அங்கிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி 42 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் இந்த மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகளை லாரி மூலம் மாவட்டத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.