பாலிஸ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கள் கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வடமாநில மர்மநபர்கள் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி வந்துள்ளனர். இதை உண்மை என நம்பிய ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கிய மர்ம நபர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் மஞ்சள் தூள் கலந்து நகையை அதில் போட்டுள்ளனர்.
அதன் பின் அடுப்பில் வைத்து சூடேற்றி பாலிஷ் செய்து தருவதாக கூறி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி திருடன் என கூச்சலிட்டு உள்ளார். பின்னர் இவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து ராஜலட்சுமி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு வட மாநில வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.