Categories
மாநில செய்திகள்

BREAKING : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்..

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.. சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது,  ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது..

குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அவர்  குற்றச்சாட்டினார்.. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து இருந்தனர்.. இந்நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி நேரமில்லா நேரத்தில் பேச முற்பட்டனர்.. ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.. இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |