Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “சரி என தலையாட்டி கொள்ளுங்கள்”… எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

பொறுமையாக இருந்து அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய மகரராசி அன்பர்களே..!! இன்று புதியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க  அனுகூலமான காரணிகள் பலம்பெறும். இன்று பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதிக்கு வழிவகுக்கும். இன்று எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை சரி என தலையாட்டி கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் இருக்கும்.

பணவரவு திருப்தி தரக் கூடிய சூழல் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். விளையாடும் போது மட்டும் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அணைத்து  காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |