மாமனார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையையும், 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ராமன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வந்துள்ளனர். அதன்பிறகு ராமனின் மகளான கோமதியிடமும், அவரின் கணவரான விஜயகுமாரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விஜயகுமார் தான் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் விஜயகுமாரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.