Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை ….தொடரை வென்று அசத்தல் ….!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்  இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . 

தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில இரு அணிகளும் சமனில் இருந்தன .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது.இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 209 ரன்கள் குவித்தது.

இதன்பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது. இதனால் 30 ஓவர்களுக்கு 125 ரன்கள் குவித்து தோல்வியடைந்தது.இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 2-1 என்று கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Categories

Tech |