Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 21 கல்லூரிகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து வருகின்றனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து பேசவுள்ளனர்.

இந்நிலையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி சட்டமன்றத்தில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடப்பாண்டு புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், உயர் கல்வித்துறை சார்பில் 10 கல்லூரிகள், அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவுத்துறை சார்பில் 1 கல்லூரியும் அடங்கும் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |