Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பின்னல்வாடி கிராமத்தில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சோனியா என்ற மனைவியும், கார்த்திக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சோனியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சோனியாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |