சாதி வேறுபாடற்ற மயானங்களை கொண்டுள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்..
அவர் தெரிவித்ததாவது, மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சியுடன் அமைக்க சட்டம் கொண்டு வரப்படும்.. சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கப்படும். திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குகிறது. சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்..