ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார்.
ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் ஆவார். அவர் இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் தனது தந்தையை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது தந்தை இறந்த பிறகு அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு நான் வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது தந்தை பிள்ளைகளை விரும்புவதை விட எதிரிகளைத் தீவிரமாக வெறுத்தார். மேலும் எனது தந்தை அல் கொய்தா அமைப்புடன் இணைந்திருந்தது அவருடைய வாழ்க்கையை வீணடித்தது அவரது முட்டாள்தனம் என்பதை நான் உணர்ந்தேன். இந்நிலையில் எனக்கும் எனது சகோதரரும் சிறிய அச்சுறுத்தல் ஒன்று உள்ளது.
அதாவது நாங்கள் இருவரும் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தல் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் பாரிஸ் நகரில் வசித்து வருகின்றேன். தனது குடும்பத்துடன் விரைவில் இஸ்ரேல் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இருப்பினும் வாழ்க்கையில் ஒரு முறையாவது அமெரிக்கா சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது. இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் எனது தந்தை தலைமறைவாக இருந்த போது அமெரிக்க சிறப்பு தேசிய பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டு கடலுக்கு அடியில் அவர் புதைக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.