Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியிலும் விநாயகர் சதுர்த்தி சிலை பொது இடத்தில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதித்து  அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வீடுகளிலேயே பாதுகாப்பான முறையில் கொண்டாடவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |