Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும்…. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக கோயில் நிலங்களை விரைந்து அளப்பதற்காக  ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டு அளவிடப்பட்டது. தமிழகம் முழுவதுமாக உள்ள கோவிலுக்குச் சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும் என்றும், ஒரு வருடத்திற்குள் அரசுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதுமாக அளவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |