Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்…. கல்வி உதவித்தொகை திட்டங்கள்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து பேசினர். இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |