Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதருக்கு நடுவே கிடந்த பிணம்… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

கொல்லிமலைக்கு அருகே புதருக்கு நடுவில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து ஆனந்தன் அடிக்கடி அவரது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று கொல்லிமலை அருகே உள்ள சோளங்கன்னி என்னும் இடத்தில் செடிகளுக்கு நடுவே ஆனந்தன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாழவந்திநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆனந்தனின் உடலில் மற்றும் தலையில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரும் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில் ஆனந்தனின் சாவில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து ஆனந்தன் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |