கொலை வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு நாணல்காடு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு இசக்கி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முறப்பநாடு பக்க பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கடந்த 11.8.2021 அன்று முறப்பநாடு காவல்துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து மாரிமுத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மரிமுத்தை கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.